தலைப்புச் செய்திகள்

Tell IGP மீண்டும் ஆரம்பம்

‘ஐஜிபிக்கு சொல்லுங்கள்’ (Tell IGP) எனும் சேவையை இலங்கை பொலிஸ் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது,

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் பொதுமக்கள் இணையம் ஊடாக முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி தொடக்கம் – இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது,

பொலிஸார் தொடர்பாகவும், பொலிஸ் விசாரணைகளில் உள்ள சிக்கல்களைப் முறைப்பாடுகளைச் செய்யவும் அல்லது பொலிஸ் சேவையைப் பற்றிய கருத்துக்களை – இந்த இணையத்தளம் ஊடாக எந்நேரமும் வழங்க முடியும்.

www.police.lk என்ற இணையத்தளம் ஊடாக – முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.