
நாடு முழுவதும் கடந்த 05 வருடங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக 12,140 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2020, 2024, 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில், போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகொடவின் மேற்பார்வையில் இடம்பெற்ற கணக்கெடுப்பில் இந்த தகவல் வௌியாகியுள்ளது.
அதன்படி, 2020 ஆம் ஆண்டில் 2,363 பேரும், 2021ஆம் ஆண்டில் 2,557 பேரும், 2022ஆம் ஆண்டில் 2,540 பேரும், 2023ஆம் ஆண்டில் 2,321 பேரும், 2024ஆம் ஆண்டில் 2,359 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இது தவிர, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நொவம்பர் 30ஆம் திகதி வரை நடந்த பஸ் விபத்துகள் தொடர்பான தகவல்களும் வௌியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 11 மாதங்களில் 198 பஸ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அவற்றுள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்களும் 50, தனியார் பஸ் விபத்துக்கள்148 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



