
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31ஆம் திகதி இது தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியிருந்தது.
அதில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்பான செய்தி: 05ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து, இறுதி முடிவு எடுக்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்



