தலைப்புச் செய்திகள்

புதிய சபாநாயகராக மற்றொரு கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவு

புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (17) தெரிவு செய்யப்பட்டார்.

ஏற்கனவே சபாநாயகராகப் பதவி வகித்த அசோக சபுமல் ரன்வல ராஜிநாமா செய்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ராஜிநாமா செய்த அசோக ரன்வலவின் கல்வித் தகைமை குறித்து ஏற்பட்ட சர்ச்சையினை அடுத்து, அவர் ராஜிநாமா செய்தார்.

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல – தன்னை கலாநிதி என குறிப்பிட்டிருந்த போதும், அவருடைய கலாநிதித் தகைமை போலியானது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: கல்வித் தகைமையை உறுதிப்படுத்தும், ஆவணத்தை சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது: ராஜிநாமா கடிதத்தில் சபாநாயகர்