
நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 19 லட்சத்து 42 ஆயிரத்து 989 ஆகும் என – மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரையில் இந்த தொகை காணப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 19 லட்சத்து 36 ஆயிரத்து 336 கடன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
இதன்படி, செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒக்டோபர் மாதம் பயன்பாட்டில் உள்ள கடனட்டைகளின் எண்ணிக்கை 6,653ஆல் அதிகரித்துள்ளது.



