
முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம், இன்று (03) சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராகவும் நளீம் கடமையாற்றியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் – கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டு, இரண்டு ஆசனங்களைப் பெற்றது.
அந்த வகையில், அந்தக் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்தது.



