தலைப்புச் செய்திகள்

நபரொருவரைத் தாக்கி கொலை செய்த வழக்கு: 08 வருடங்களுக்குப் பின்னர் 06 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு

நபரொருவரை 08 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 06 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றில் 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவரைக் கொன்று 07 பேரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் – இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நாரஹேன்பிட்டி, பார்க் வீதியிலுள்ள ஒரு மரண வீடொன்றில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றில், கம்புகள் மற்றும் கூரிய பொருட்களால் குற்றவாளிகள்ட பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கியுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி லிஷான் ரத்நாயக்க முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் – சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வெலிக்கடை சிறைச்சாலையில் ஜனாதிபதி நிர்ணயித்த திகதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.