உத்தியோகபூர்வ வீடுகளைப் பெறுவதற்காக 35 எம்.பிகள் விண்ணப்பம்

🕔 November 29, 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 35 பேர் – மாதிவல வீடமைப்புத் தொகுதியில் உள்ள உத்தியோகபூர்வ வீடுகளைப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்று, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது எனவும், அவர் ஊடகங்களிடம் கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரும்பவும் கையளித்த 25-30 வீடுகள் தற்போது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கும் பொருட்டு புனரமைக்கப்படுவதாக விளக்கமளித்த அவர், இந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றார்.

மொத்தமுள்ள 108 உத்தியோகபூர்வ இல்லங்களில், 80 ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காகவும், 28 எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோமீற்றர்களுக்கு அப்பால் வீடுகளைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மாதிவல வீடமைப்பு வளாகத்தில் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கோருவதற்கு தகுதியுடையவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்