
இலங்கையின் அண்ணியச் செலாவணிக் கையிருப்பு ஒக்டோபர் மாதத்தில் 474 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகமத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி தற்போதை மொத்த அண்ணியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் டொலர்களாக (,இலங்கைப் பெறுதியில் 01 லட்சத்து 87 ஆயிரத்து 186 கோடி) அதிகரித்துள்ளது.
இலங்கையின் மொத்த அண்ணியச் செலாவணிக் கையிருப்பு என்பது – மத்திய வங்கியின் பண இருப்பு மற்றும் கடனிலிருந்து வரும் நிதி கையிருப்பு ஆகியவற்றால் ஆனதாகும்.
ஒக்டோபர் மாதம் 200 மில்லியன் டொலர் உலக வங்கி கடனில் இலங்கை கையெழுத்திட்டது. ஆனாலும் அது வழங்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.



