தலைப்புச் செய்திகள்

ரத்தச் சிவப்பாக கால்வாய் மாறியமை தொடர்பில் தகவல்

கால்வாயொன்றின் நீர் – அண்மையில் ரத்த சிவப்பாக மாறியமை தொடர்பாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரித்து வருகின்றது.

படோவிட்ட பகுதியில் உள்ள கால்வாயொன்றே இவ்வாறு சிவப்பாக மாறியிருந்தது.

தண்ணீரில் கரையக்கூடிய சாயம் -இவ்வாறு அசாதாரண நிறமாற்றத்தை ஏற்படுத்தியதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் – மேல் மாகாண அலுவலகம் நடத்திய சோதனையில் தெரியவந்தது.

நபரொருவர் சாயத்தை சேமித்து வைத்ததாகவும், கடுமையான ழையின் போது தற்செயலாக குறித்த சாயம் கால்வாயில் கலந்துள்ளதாகவும் அதிகாரிகள் நம்புகிறார்கள் என, செய்திகள் தெரிவிக்கின்றன.