“ட்ரம்ப் தவறி விடுவார்”: ஹுதி தலைவர் தெரிவிப்பு

🕔 November 7, 2024

டொனால்ட் ட்ரம்ப் – இஸ்ரேலை ஆதரிப்பதற்காக யேமனின் ஹுதி தலைவர் விமர்சித்துள்ளார், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மத்திய கிழக்கு மோதலை முடிவுக்கு கொண்டுவரத் தவறிவிடுவார் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இது குறித்து அப்துல் மாலிக் அல்-ஹூதி கூறுகையில்; முதல் பதவிக் காலத்தில் ட்ரம்பின் நிர்வாகத்தால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இயல்பான ஒப்பந்தங்கள், மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ட்ரம்ப் தனது ஆணவம், அகந்தை, பொறுப்பற்ற தன்மை மற்றும் கொடுங்கோன்மை ஆகியவற்றினால் ‘நூற்றாண்டின் ஒப்பந்தம்’ என்ற திட்டத்தில் தோல்வியடைந்தார். மேலும் அவர் இந்த முறையும் தோல்வியடைவார்” என்றும் அப்துல் மாலிக் அல்-ஹூதி மேலும் கூறினார்.

2014 ஆம் ஆண்டு முதல் யேமன் தலைநகர் சனாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதிகள், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உள்ள வணிகக் கப்பல்களைத் தாக்கி வருவதோடு, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்