
பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, அதற்காகப் பணம் கேட்டு அச்சுறுததிய குற்றச்சாட்டில் 20 வயது நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி) கைது செய்தனர்.
சந்தேகநபர் – பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூக ஊடகங்கள் மூலம் உறவை ஏற்படுத்திக் கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஒன்லைன் உரையாடல்களின் போது, குறித்த பெண் – தனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இவற்றினை வைத்தே, சந்தேக நபர் மிரட்டியுள்ளார்.
குறித்த பெண் 07 லட்சம் ரூபாய் பணம் கொடுக்காமல் விட்டால், அவரின் நிர்வாணப் படங்களை வெளியிடுவேன் என்று அந்த இளைஞர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
புகாரைப் பெற்ற வடமேற்கு சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் – விசாரணை நடத்தினர்.
சம்பவம் தொடர்பில் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் தெஹிவளை பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.



