
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்திற்குள் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கூறுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் அடுத்த வருடத்துக்குள் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றார்.
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி பதவி, பலமான அமைச்சரவை, நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பலமான அரசியல் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது முக்கியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி, பலமான அமைச்சரவை, நாடாளுமன்றம், மாகாண சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அரசியல் பொறிமுறையானது நிர்வாகத்துக்குத் தேவை. அடுத்த வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் தேர்தலை நடத்தவும் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.



