
செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது – நுவரெலியா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதுபாண்டி ராமேஸ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் ஏ.பி. சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – தனது சொந்த சின்னமான சேவல் சின்னத்தைத் தவிர்த்து – ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சொந்தமான யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் பீடம் இன்று (08) கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.



