தலைப்புச் செய்திகள்

பொதுத் தேர்தல் திகதி செல்லுபடியாகாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலுக்கென அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசியலமைப்புக்கு முரணானது என – சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மறுத்துள்ளார்.

நொவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை செல்லுபடியாகாது என்று சிலர் கூறி வருகின்றனர். ஏனெனில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஐந்து வார இடைவெளியின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என மேற்படி நபர்கள் வாதிடுகின்றனர்.

“ஒக்டோபர் 11ஆம் திகதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது. எனவே, அந்தத் திகதியிலிருந்து, ஐந்து வார இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனவே, அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் திகதி சரியானது” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க – ஊடகமொன்றுகக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்; நொவம்பர் 14 அன்று பொதுத் தேர்தல்