தலைப்புச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழக்கின்றனர்

னாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 35 பேர் தங்கள் இழக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், 35 வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக 12.5% ​​வாக்குகளைப் பெறாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம் 79% க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் 2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு 83% ஆக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 39 பேர் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்த போதும், ஒருவர் தேர்தலுக்கு முன்னரே மரணமடைந்தார். ஆயினும் அவருக்கு பதிலாக வேறு பெயர்கள் வழங்கப்படவில்லை. எனவே போட்டியில் 38 வேட்பாளர்களே இருந்தனர்.

இவர்களில் அனுர குமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய 03 வேட்பாளர்கள் மட்டுமே, 12.5 வீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தனர். நாலாவது இடத்தைப் பெற்ற நாமல் ராஜபக்ஷ 2.57 வீதமான வாக்குகளையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.