சீனா வழங்கும் மாணவர் சீருடைத் துணியினால், அரசுக்கு 700 கோடி ரூபாய் மீதம்

🕔 September 18, 2024

சீன உதவியில் வழங்கப்படும் பாடசாலை சீருடை துணிகளை – ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலைகள் விடுமுறைக்கு முன்னர், வழங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகவுள்ளது என்று, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு புதிய பாடசாலை பருவத்திற்கு முன்னர் 4.3 மில்லியன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடைகளையும், 825 பிரிவேனாக்களுக்கான ஆடைகளையும் சீன அரசு மானியமாக வழங்க உள்ளது.

அதன்படி, சீருடைத் துணிக்கான முதல் தொகுதி நொவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நொம்பர் 21-ஆம் தேதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20-ஆம் திகதியும் பெறப்படும்.

இந்த சீருடைகளை சீன அரசிடமிருந்து 100% இலவசமாகப் பெற்று வழங்குவதன் மூலம், அரசுக்கு ரூ. 7,000 மில்லியன் ரூபாய் மீதமாகும். மாணவர்களுக்கான சீருடை துணிகளை ஜனவரி 20ம் திகதிக்கு முன் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவிக்காக சீன அரசுக்கும் சீன தூதுவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்