06 லட்சம் சுவரொட்டிகள் பொலிஸாரால் அகப்பட்டன

🕔 September 18, 2024

னாதிபதி தேர்தல் தொடர்பில் ஒட்டப்பட்டிருந்த 06 லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை அகற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 17 முதல் இதுவரையில் பின்வரும் 02 லட்சத்து 7900 சுவரொட்டிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை 1,500 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதோ, 1,100 பேனர்கள் கைப்பற்றப்பட்டன.

கட்அவுட்கள் 1,550 அகற்றப்பட்டதோடு, 1,600 கட்அவுட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

7,600 அகற்றப்பட்டதோ, 10,750 துண்டுப் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்