
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் 25 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் உள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டின் நீளத்திலேயே – இந்த ஆண்டுக்கான வாக்குச் சீட்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடு முழுவதும் 13 ஆயிரம் வாக்குச் சாவடிகளும், 45 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்படவுள்ளன.



