
– முன்ஸிப் –
தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, பேராசிரியர் எம்.எம். பாஸில் – இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் பாஸில் – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக கடந்த 2021 ஓகஸ்ட் 16ஆம் திகதி – முதலாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று வருடங்களைக் கொண்ட அந்தப் பதவிக் காலம் நிறைவடைந்தமையினை அடுத்து, இன்றைய தினம் (15) கலை கலாசார பீடத்துக்கான பீடாதிபதியைத் தெரிவு செய்யும் நிகழ்வில், அவர் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
மருதமுனையை சொந்த ஊராகக் கொண்ட பேராசிரியர் பாஸில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் கலாநிதிக் கற்கையினை நிறைவு செய்துள்ளார்.
மேலும், அரசியல் விஞ்ஞானத் துறையில் பேராசிரியர் பதவி உயர்வு பெற்ற – முதலாவது இலங்கை முஸ்லிம் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



