தலைப்புச் செய்திகள்

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் பதில் நீதவான் – நாடாளுமன்ற உறுப்பினரை 02 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கியதோடு, ஜுலை 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றில் ஆஜராகாமையினை அடுத்து, அவரை கைது செய்யுமாறு கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றம் – கடந்த 08ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

அதற்கு அமையவே, அவர் இன்று கைது செய்யப்பட்டார்.