
மின்சார கட்டணத்தை 22.5 வீதத்தால் குறைப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தத் திருத்தத்தின்படி, வீடுகளில் 30 அலகுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களின் கட்டணம் 08 ரூபாயில் இருந்து 05 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 61 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்த பாவனையைக் கொண்ட மின் பாவனையாளர்களின் கட்டணங்கள் 55 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அலகு ஒன்றின் விலை 20 ரூபாயிலிருந்து 09 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களை 30 வீதத்துக்கும் அதிகமாகக் குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



