
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் திகதியை இம்மாத இறுதிக்குள் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் என்று, அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின்படி ஜூலை 17ஆம் திகதியன்று இந்த திகதியை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக் தயாராகுவதற்கான போதுமான அவசகாசத்தை குறிப்பிட்ட காலம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு விரைவில் உறுதிப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, சுமார் 17 மில்லியன் பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.



