ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல்

🕔 July 15, 2024

மெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் எனும் 20 வயது இளைஞர் என அடையாம் காணப்பட்டுள்ளார்.

டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் குறித்த இளைஞரின் வசிப்பிடம் அமைந்துள்ளது. இவர் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 தாக்குதல்தாரியான க்ரூக்ஸ் – குடியரசுக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட ஓர் அங்கத்தவர் என்பதை மாநில வாக்காளர் பதிவுகள் காட்டுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியரசுக் கட்சி சார்பிலேயே ட்ரம்ப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறமாக, தாக்குதல்தாரி 2021 இல் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழுவொன்றுக்கு 15 டொலர் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது ஜனாதிபதி ஜோ பைடனின் கட்சியாகும்.

சிஎன்என் ஊடகத்திடம் பேசிய க்ரூக்ஸின் தந்தை, மேத்யூ க்ரூக்ஸ்; “என்ன நடக்கிறது” என்பதை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதாக அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். தனது மகனைப் பற்றி பேசுவதற்கு முன் “நான் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் பேசும் வரை காத்திருப்பேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய 20 வயது இளைஞன் க்ரூக்ஸ், ரகசிய சேவை ஏஜென்டுகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்பான செய்தி: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்