அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன?

🕔 July 14, 2024

மெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – நொவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக தனது சமூக ஊடகத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சனிக்கிழமை இரவு டொனால்ட் டிரம்பின் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன்போது பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரி கொல்லப்பட்டார்.

“ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன். அப்போது உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்” என்று டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரம்ப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாக” தெரிவித்துள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்புடன் ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்