மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

🕔 June 12, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவு ஜூன் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு, இன்று (12) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.

இருந்தபோதிலும் மே 12 அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார், அதைத் தொடர்ந்து அவர் தரப்பைச் சேர்ந்த – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்