
சிறுமி ஒருவரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டில் டாக்ஸி சாரதி (Taxi driver) ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்படி 35 வயதுடைய நபர் தனது குடியிருப்புக்கு அருகாமையில் – வாடகை வீட்டில் குடியிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (11) வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே, குற்றவாளிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால், மேலதிக அபராதம் வசூலிக்கப்படும் என்றும், அந்த அபராதத் தொகையையும் செலுத்தத் தவறினால், கூடுதலாக 02 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் இதன்போது நீதிபதி தீர்ப்பளித்தார்.



