ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி

🕔 April 1, 2024

னாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கீழ் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜுலை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஜூலை மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக – அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆனாலும் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் ஒக்டோபர் மாதத்துக்கும் இடையிலான காலகட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஜனாடதிபதி தேர்தலை நடத்துவதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறும், அவ்வாறு நடத்தினால் ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்