எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு

🕔 April 1, 2024

ரிபொருட்களின் விலை இன்று (01) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாயாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 245 ரூபாய்.

ஆயினும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றங்களுமில்லை.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று 371 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், டீசல் லீட்டர் ஒன்று 363 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்