இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

🕔 February 12, 2024

ல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகள் காரணமாக, அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சட்டம் தொடர்பான 47 திருத்தங்கள் இன்று (பெப்ரவரி 12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக லங்காதீப தெரிவித்திருந்தது.

சட்டத்தின் 47 பிரிவுகளை மாற்றியமைப்பதற்கான திருத்தங்களை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கு இன்று (12) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருத்தப்பட்ட சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும், 2024 பெப்ரவரி 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட அதிக வாய்ப்புள்ளது.

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து – எதிர்க்கட்சிகள் உட்பட பல கட்சிகளால் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்களை கருத்தில் கொள்ளாமல் இணையப் பாதுகாப்பு சட்டமூலம் எப்படி நிறைவேற்றப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

Comments