சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

🕔 February 7, 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

“சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு 74 வயது.

முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை சிலியின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா உறுதிப்படுத்தினார். விபத்துக்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

செபஸ்டியன் பினேரா 2010 முதல் 2014 காலப்பகுதியிலும், 2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியிலும் சிலியின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

செபஸ்டியன் பினேரா – சிலியின் ஐந்தாவது பெரிய செல்வந்தராவார். அவரின் சொத்து மதிப்பு, சுமார் 03 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 93975 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments