92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான விலைகள் அதிகரிப்பு

🕔 February 1, 2024

க்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாயினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (01) முதல் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 371 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐஒசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் விலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்