இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம்

🕔 January 19, 2024

லங்கை மின்சார சபையின்15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான மின்சார விநியோகத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஜனவரி 03ஆம் திகதி முதல் – மின்சார சபையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் செலுத்தும் கவுண்டர்களுக்குப் பொறுப்பான மேற்படி ஊழியர்கள், தங்கள் கட்டணங்களைச் செலுத்த வந்த வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெறாமல் கவுண்டர்களை மூடி – வாடிக்கையாளர்களுக்கு இடைஞ்சல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையில், சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு – மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்