துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா

🕔 January 17, 2024

னிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக – துமிந்த சில்வாவுக்கு தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த சத்திய கடதாசியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘துமிந்த சில்வாவுக்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் மற்றும் ஆவணங்கள் காணப்பட்டன’ என்றும் தனது சத்தியக் கடதாசியில் அவர் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் – மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியமையை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்தது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்திய கடதாசியில், ‘நாட்டின் நலனைகருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரின் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது’ எனவும் அந்த சத்தியக் கடதாசியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்