இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டி சாதனை

🕔 January 2, 2024

லங்கை சுங்கத் திணைக்களம், அதன் வரலாற்றில் அதிக வருவாயை கடந்த ஆண்டு ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபாயை தாம் வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின் வரலாற்றில் ஈட்டபட்ட அதிக வருமானமாக பதிவாகியிருந்தது.

நிதியமைச்சு, கடந்த வருடத்துக்கான வருமான இலக்காக 1217 பில்லியன் ரூபாயை இலங்கை சுங்கத்துக்கு நிர்ணயித்திருந்தது.

இருந்தபோதிலும், இறக்குமதி கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அந்த இலக்கை 893 பில்லியன் ரூபாயாக திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்