சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம்

🕔 January 1, 2024

கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதிகள் – தற்போதைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு கிழக்கின் கேடயம் தொண்டர்கள் சென்று, மேற்படி உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

‘அயலவர்களுக்கு உதவுவோம்’ எனும் திட்டத்தின் கீழ், 800 குடும்பங்களுக்கு மேற்படி நிவாரணம் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், கொரோனா காலத்தில் 1000 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை – கிழக்கின் கேடயத்தின் தலைவர் சபீஸ் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் – கொட்டும் மழையிலும் கிழக்கின் கேடயத்தின் நிவாரணப் பணிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும்மழை காரணமாக, தாழ் நிலப்பகுதிகளிலுள்ள பலரின் வசிப்பிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அதேவேளை அன்றாட கூலித் தொழிலாளிகள் தமது வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

இப்படியான இறுக்கமான சூழ்நிலையில் – கிழக்கின் கேடயத்தின் நிவாரணப் பணிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்