கைத்தொலைபேசிகளின் விலை நாளை 35 வீதம் உயர்கிறது: சரிபாதியாக வியாபாரம் வீழ்ச்சியடையும் என கவலை

🕔 December 31, 2023

னைத்து வகை கைத்தொலைபேசிகளின் விலைகளும் நாளை (01) முதல் அதிகரிக்கப்படுமென கைத்தொலைபேசி விற்பனை மற்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் கைத்தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் பேசுகையில்; நாளைய தினம் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி (VAT) 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த விலை உயர்வுக்கு ஏற்ப கைத்தொலைபேசி சந்தையில் 50% கொள்முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த விலையேற்றத்தின்படி, 01 லட்சம் ரூபா விலைக்கு விற்கப்படும் கைத்தொலைபேசி, நாளை முதல் 135,000 ரூபாய் விலைக்கு விற்க வேண்டியேற்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்