அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை

🕔 December 5, 2023

க்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம் – ண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 25 பாடசாலைகளில், ஸஹ்ரா வித்தியாலயம் இந்த அடைவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸஹ்ரா வித்தியாலயத்திலிருந்து 2022ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 25 மாணவர்களில் – அனைவரும் (100 சதவீதம்) சித்தியடைந்து, உயர்தரம் கற்பதற்கான தகுதியினைப் பெற்றுள்ளனர்.

2018ஆம் ஆண்டிலிருந்தே – இந்தப் பாடசாலையிலிருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றி வருகின்றனர்.

இதன்படி அந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 88.7 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்தனர். 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் 100 சதவீதமானோர் சித்திபெற்றனர். 2021ஆம் ஆண்டு 88.88 சத வீதமானோரும், இறுதியாக நடைபெற்ற 2022ஆம் ஆண்டுப் பரீட்சையில் 100 சதவீதமானோரும் சித்திடைந்துள்ளனர்.

பல்வேறு குறைபாடுகள் மற்றும் தேவைகளுடன் இயங்கி வரும் ஸஹ்ரா வித்தியாலயத்தின் உயர்வுக்காக – அதிபர் எம்.எஸ்.எம். பைறூஸ், அங்குள்ள ஆசிரியர் குழாத்தினருடன் இணைந்து மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார்.

இவரின் காலத்தில்தான் ஸஹ்ரா வித்தியாலயத்தில் .க.பொ.த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான கட்டுரை: உலகளவில் போஷாக்கு குறைபாடு ஆபத்தை அதிகம் எதிர்கொள்ளும் இலங்கை சிறுவர்கள்: பாடசாலை மதிய உணவு கைகொடுக்குமா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்