புதிய ஜனாதிபதியை 20ஆம் திகதி தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு

🕔 July 16, 2022

புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றின் மூலம் தெரிவு செய்யும் தீர்மானத்தில், பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் தெரிவுத்துள்ள நிலையில், டளஸ் அலக பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் (டளல்) முன்வந்துள்ளதால், கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டுமே தவிர வெளி வேட்பாளரை அல்ல என, பீரிஸ் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், அந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் களமிறங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் மிகவும் பொருத்தமானவர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கட்சி என்ற வகையில் பொதுஜன பெரமுன வேறு எந்த வேட்பாளரையும் ஜனாதிபதி பதவிக்கு ஆதரிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்