பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி

🕔 December 5, 2023

தெற்கு காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருவதால் – போர் தீவிரமடைந்துள்ளது. முன்னர் வடக்கு காஸாவிலிருந்து பொதுமக்களை தெற்கு காஸாவுக்கு இடம்பெயருமாறும், பாலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பான பகுதியாக தெற்கு காஸா அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்ட “காஸாவில் பாதுகாப்பான வலயங்கள் சாத்தியமில்லை” என்று யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தெற்கு காஸாவில் பாலஸ்தீன குடிமக்கள் மீது – இஸ்ரேலின் கண்மூடித்தனமான குண்டுவீச்சு ‘புதிய ஆழத்தை’ எட்டியுள்ளது என்று – நோர்வே அகதிகள் சபை தலைவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஜபாலியா அகதிகள் முகாமைத் தாக்கி, ஆழமாக ஊடுருவ முயற்சிப்பதாக அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணை முகவரகத்தின் பணியாளர்கள் 130 பேர் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர் என, அதன் ஆணையாளர் நாயகம் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 07 முதல் காஸாவில் குறைந்தது 15,899 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்