தலைப்புச் செய்திகள்

பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு

லங்கையில் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் – குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணிகள் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்தன என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கேள்விக்கு பதிலளித்த ராஜாங்க அமைச்சர், இலங்கையில் 124,482 குழந்தைகளை உள்ளடக்கிய 89,164 ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பதின்ம வயது சிறுவர்களுக்குவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.