அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம்
நாடு முழுவதும் 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் – அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 10 வலயங்களும், கம்பஹா மாவட்டத்தில் 08 வலயங்களும், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 03 வலயங்களும், கண்டி மாவட்டத்தில் 11 வலயங்களும், மாத்தளை மற்றும் காலி மாவட்டங்களில் தலா இரண்டும், மட்டக்களப்பு மற்றும் குருநாகலில் தலா ஒன்றும், புத்தளம் மாவட்டத்தில் இருந்து நான்கும் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் 34,645 எனும் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.