விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி இழக்கிறார்

🕔 November 13, 2023

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க – தற்போது வகித்து வரும் பதவியைத் தொடர மாட்டார் எனவும், அவர் பதவி விலகுவார் அல்லது நீக்கப்படுவார் எனவும் ஊகங்கள் பரவி வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாடாளுமன்றத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிறிக்கெட் சபைக்கு எதிரான அமைச்சரின் நடவடிக்கை காரணமாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சருக்கும் இடையில் முரண்பாடுகள் தலை தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்