பட்ஜட்: அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிப்பு

🕔 November 13, 2023

ரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து நிதியமைச்சர் எனும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றி வரும் நிலையில், பல்வேறு நலத் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

அந்த வகையில்;

  •  அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். எனினும் இந்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாத சம்பளத்துடனேயே வழங்கப்படும் என்றார்.
  •  ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
  • அரச ஊழியர்களுக்கு அனர்த்த கடன் – வழக்கம் போல் வழங்கப்படும் என்றார்.
  •  சிரேஸ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை கொடுப்பனவு 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
  • அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
  • பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
  • பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
  • தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும்.
  • 19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்.
  • அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அதற்காக 2024இல் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திறன் விருத்தி ஆணைக்குழுவை நிறுவப்படும்.
  • மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படுவதோடு, திறன் விருத்தி மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மாகாண கல்வி சபைகளை நிறுவப்படும்.
  • தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்