நான்கு பேரில் ஒருவருக்கு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை

🕔 October 27, 2023

ருபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 04 பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணர் டொக்டர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்; ஒரு தடவை பாரிச வாதத்துக்கு உள்ளானால் மீண்டும் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 25% இருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போது, இலங்கையில் சுமார் 200,000 பக்கவாத நோயாளர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முகம், கை அல்லது கால்களின் பலவீனம் அல்லது உணர்வின்மை, மந்தமான பேச்சு ஆகியவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்.

35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், நாடு முழுவதும் உள்ள ‘சுவ திவி’ மருத்துவ மையங்களுக்குச் சென்று, தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்