நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார்

🕔 October 20, 2023

நாடாளுமன்றத்தினுள் வைத்து – தன்னை – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக ராஜாங்க அமைச்சர்  டயானா கமகே இன்று (20) சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனைக் கூறினார்.

தான் சபையிலிருந்து வெளியே சென்ற போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க, நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்