ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது

🕔 October 13, 2023

ஹாபிஸ் நசீரின் கீழிருந்த சுற்றாடல் துறை அமைச்சு – ஜனாதிபதி வசமாகியுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி இம்மாதம் 11ஆம் திகதியிலிருந்து குறித்த அமைச்சு – ஜனாதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சராக இருந்த ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோனமையை அடுத்து, அவரின் கீழ் இருந்த அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட், அந்தக் கட்சியின் முடிவுக்கு மாற்றமாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில் – கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஹாபிஸ் நசீர் அஹமட் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அந்த வழக்கில் – ஹாபிஸ் நசீர், கட்சியிருந்து நீக்கப்பட்டமை சட்டப்படி சரியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்