ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

🕔 October 11, 2023

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது வெற்றிடமாகியுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அலிசாஹிர் மௌலானா அந்த இடத்தைப்பெற்ற நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து ஹாபிஸ் நசீர் அஹமட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டமை சட்டப்படி செல்லுபடியாகும என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தொடர்பான செய்தி: ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்