இயந்திரத்துக்கு சேதாரம் இல்லை: ATM இல் 7.8 மில்லியன் ரூபாய் திருட்டு

🕔 September 20, 2023

நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் 7.8 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி நிர்வாகம் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் ஏரிஎம் இயந்திரம் எந்த விதத்திலும் சேதமடையவில்லை எனவும், இயந்திரம் திறந்து – பணம் அகற்றப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் திட்டமிட்ட குழுவா அல்லது வங்கியிலுள்ள நபர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்