
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டொக்டர் அஜித் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் இந்தப் பதவியை வகித்த சரத் லியனகே – சுகாதார அமைச்சரால் நீக்கப்பட்ட பின்னர், புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல – புதிய தலைவர் பதவிக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் டொக்டர் அஜித் மென்டிஸ், இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்



